No results found

    குடும்பத்தினருடன் செல்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது


    வில்லியனூர் போலீசார் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் வில்லியனூர், மங்கலம், கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி தலைமையேற்று பேசுகையில், அனைத்து போலீசாரும் பணியின் போது துரிதமாக செயல்படவேண்டும். போலீஸ் சரகத்திற்குள் எந்தவித பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருந்தாலும் அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் அதனை முன்கூட்டியே அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க ரோந்து போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். காலை, மாலை பள்ளி நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய அனைத்து போலீசாரும் முன் வர வேண்டும்.

    போலீசார் நடத்தும் வாகன சோதனையின் போது குடும்பத்தாருடன் செல்பவர்களை மறித்து விசாரிப்பதை தவிர்க்க வேண்டும். இதேபோல் வேலை விட்டு வரும் தொழிலாளர்களையும் வாகன சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தக் கூடாது. மாலை 6 மணிக்கு மேல் பெண்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கக் கூடாது. ரவுடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் அவர்களுடைய நடத்தை களை கண்கா ணிப்பது அவசியம். போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள ரவுடிகளை கண்காணிக்கும் வகையில் அக்கம்பக்கத்தினர் மூலம் அவர்களுடைய நட மாட்டத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வணிக வளாகங்களில் வாசல்களில் நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளை எச்சரிக்க வேண்டும். சிறார்களிடம் விசாரணை மேற்கொள்ளும் போது உச்ச நீதிமன்ற அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்திற்கு வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ் பெக்டர் வேலு, குமார், மங்களம்போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா உள்ளிட்ட காவல் நிலைய தலைமை காவலர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال