No results found

    அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை?


    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலையின் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال