வீடு அல்லது மனைகளுக்கான வங்கி கடன் விண்ணப்பத்துடன், சுய விபரங்கள் அடங்கிய பல சான்றுகளை தர வேண்டியதாக இருக்கும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டு கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்: பொதுவான சான்றுகள் : * வயதை குறிப்பிடும் சான்று * இருப்பிடத்திற்கான சான்று * விண்ணப்பிப்பவர் பெறும் வருமானத்திற்கான அத்தாட்சி * கடந்த 6 மாத காலத்திற்கான வங்கி ‘ஸ்டேட்மெண்ட்’ * விண்ணப்பிப்பவர்களது ‘பாஸ்போர்ட் சைஸ்’ புகைப்படங்கள் மாத சம்பளம் பெறுபவர்கள் : * ‘சாலரி ஸ்லிப்’ மற்றும் பார்ம்-16ஏ
* ‘ரேஷன் கார்டு’, ‘பான் கார்டு’, தொலைபேசி கட்டண ரசீதுகள் அல்லது மின்கட்டண ரசீதுகளின் ‘ஜெராக்ஸ்’ நகல்கள் * மற்ற அசையா சொத்துக்கள் பற்றிய சான்றுகள் * ஆயுள் காப்பீட்டு செய்திருந்தால் அதற்கான ‘பிரிமியம்’ செலுத்தியதற்கான ரசீதுகள் * ஆறு மாதங்களுக்கான ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’ மற்றும் தேவையான அளவு புகைப்படங்கள்
தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் : * எவ்வகை தொழில் அல்லது வியாபாரம் என்பது பற்றிய தகவல்கள் * வியாபாரம் அல்லது தொழில் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ்கள் * அங்கீகரிக்கப்பட்ட கணக்கு தணிக்கையாளர் மூலம் சான்றளிக்கப்பட்ட 3 வருட வருமான வரி கணக்கு அறிக்கைகள் * ‘அட்வான்ஸ் டாக்ஸ் பேமெண்ட்’ செலுத்தி இருந்தால் அதற்கான ஜெராக்ஸ் நகல்கள் * தொழில் வரி செலுத்தி வருவது பற்றிய சான்றுகள் * பிற வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் அதன் விபரங்கள் * மேற்கண்டவற்றோடு ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’, குடும்ப அட்டை, தொலைபேசி கட்டண ரசீது, ‘இன்சூரன்ஸ்’ போன்ற இதர தகவல்களும் கேட்கப்படும்.