No results found

    யமுனை நதியில் தற்செயலாக மீனவர் வலையில் சிக்கிய டால்பின்: சமைத்து சாப்பிட்டதால் கைது நடவடிக்கை


    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் குறிப்பாக உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கிடையே நான்கு மீனவர்கள் வலைவீசி யமுனையில் மீன்பிடித்துள்ளனர். கடந்த 22-ந்தேதி அவர்கள் வீசிய வலையில் தற்செயலாக டால்பின் மீன் சிக்கியுள்ளது. பொதுவாக யமுனை நதியில் டால்பின் மீன்கள் இருப்பதில்லை. அரிதாக இவர்கள் வலையில் சிக்கியுள்ளது. டால்பின் மீனை கெத்தாக தனது தோளில் சுமந்து சென்றுள்ளார் அதில் ஒரு மீனவர். அதோடு வீட்டிற்கு கொண்டு சென்று டால்பின் மீனை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதை சாலையில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் வனத்துறையினருக்கு புகார் வர, வீடியோவை ஆதாரமாக கொண்டு டால்பின் மீனை பிடித்த மீனவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال