No results found

    லடாக் கார்கிலில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு


    யூனியன் பிரதேசமான லடாக்கில் முதன்முதலில் மகளிர் காவல் நிலையம் செயல்படத் தொடங்கப்பட்டுள்ளது.

    லடாக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.டி சிங் ஜம்வால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"இந்த மகளிர் காவல் நிலையம் தேவைப்படும் பெண்களுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை உறுதி செய்வதற்காக 24 மணிநேரமும் செயல்படும். கூடுதலாக, சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் வள மையமாக இது செயல்படும்.

    கார்கிலில் மகளிர் காவல் நிலையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது. ஏனெனில், இது அப்பகுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் கவலைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்றார். மேலும், லடாக் காவல்துறை தலைவர் கூறியதாவது:- கார்கிலில் மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா என்பது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இந்த முயற்சியானது பெண்கள் தங்கள் கவலைகள் உணர்வுபூர்வமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படும் என்பதை அறிந்து அதிக நம்பிக்கையுடன் காவல்துறையை அணுக உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال