No results found

    கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்த விவகாரம்- மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு நேரில் விசாரணை


    கர்நாடக மாநிலம் உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கழிவறையில் ரகசிய கேமிராவை பொருத்தி சக தோழிகளை ஆபாச படம் பிடித்து தங்கள் ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கல்லூரி மாணவிகள் 3 பேர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த வீடியோ விவகாரத்துக்கு இந்து அமைப்புகள், பா.ஜனதா மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் மல்பே நகர போலீசார் தாமாக முன் வந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் பற்றி கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறும்போது, பா.ஜனதா இந்த விஷயத்தை வைத்து குட்டி அரசியலில் ஈடுபடுகின்றன. நண்பர்களுக்கு இடையே நடந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஊதி பெரிதாக்கி அரசியல் சாயம் பூச வேண்டுமா? இவையெல்லாம் கடந்த காலங்களில் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நடக்கவில்லையா? என்றார். இந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரிப்பதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு உடுப்பி சென்று உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- குழந்தைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பெண்களின் கண்ணியத்துடன் யாரும் விளையாட முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال