No results found

    வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்


    டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஒடிசா நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மெதுவாக வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் 26ம் தேதி வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال