No results found

    தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பி.எம்.எஸ். தொழிற்சங்கம் தீர்வு காண்கிறது


    புதுவை உப்பளம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. விழுப்புரம் மண்டல தலைவர் இளவரசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் புதுவை மாநில பி.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் ஆசைத்தம்பி, மாநில செயலாளர் சிவக்குமார், பொதுச் செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் வீரமணி, ஆறுமுகம், கணேசன், நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிமனை செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் பி.எம்.எஸ். சங்க தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் மற்றும் பேரவை தலைவருமான விமேஸ்வரன், மாநில செயலாளர் சி.எஸ்.முருகன் ஆகியோர் சங்க கொடி ஏற்றி சிறப்புரையாற்றினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி உள்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:- பி. எம். எஸ். தொழிற்சங்கம் வளர்ந்து வரும் தொழிற்சங்கமாகும். தொழிலாளர் பிரச்சினைகளுக்கு வி. எம். எஸ். தொழிற்சங்கம் சுமூக தீர்வு கண்டு வருகிறது. தொழிலாளர்களின் உரிமையைப் பெற்றுத் தரும் தலைசிறந்த தொழிற்சங்கமாக பி.எம்.எஸ். விளங்குகிறது. நாட்டின் மீது முதன்மையான அக்கறை கொண்டு செயல்படும் பி. எம். எஸ். தொழிற்சங்கம் தேசத்திற்காகவும் தொழிலாளர்களுக்காகவும் சேவையாற்றி வருகிறது. இந்த சங்கத்திற்காக பா.ஜ.க.வும், கட்சி நிர்வாகி களும் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். இதில் அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜனதா மாநில துணை தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகினர். நிகழ்ச்சியில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், முதலியார்பேட்டை பொறுப்பாளர் செல்வகணபதி, மாநில வணிக பிரிவு தலைவர் சத்யராஜ், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், முதலியார்பேட்டை தொகுதி தலைவர் இன்பசேகரன், உப்பளம் தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் சக்திவேல், ரவிச்சந்திரன், ஜெயரட்சகன், வெங்கடேஷ், கருணாநிதி, கார்த்திகேயன் சேகர் ஆகியோர் பங்கேற்கின்றனர். பணிமனை தலைவர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال