No results found

    அலப்பறைய கிளப்பிட்டாங்க.. 15 நொடிகளில் விற்று தீர்ந்த ஜெயிலர் பாஸ்


    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த இசை வெளியீட்டு விழாவை நேரில் காண 1000 இலவச பாஸ்களை ரசிகர்களுக்கு வழங்குவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கான பதிவு இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. ஆனால், பாஸுக்கான புக்கிங் தொடங்கிய 15 நிமிடத்தில் விற்று தீர்ந்து விட்டது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال