No results found

    தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு


    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் கடை விற்பனையாளர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. கூடுதலாக 10 ரூபாய் தராவிட்டால் மதுபாட்டில் தரமுடியாது என்று சில கடைக்காரர்கள் கூறும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்ததால் 10 ரூபாய் அதிகம் வாங்கும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு இப்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குவாட்டருக்கு ₨10 முதல் முழு பாட்டிலுக்கு ₨320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال