No results found

    ஆசிய சாம்பியன் ஹாக்கி - இந்தியா, ஜப்பான் இடையிலான ஆட்டம் டிரா


    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    முதல் போட்டியில் மலேசியா சீனாவை 5-1 என வீழ்த்தியது. கொரியா, பாகிஸ்தான் இடையிலான 2வது போட்டி சமனில் முடிந்தது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

    ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 43வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில், 1-1 என போட்டி சமனில் முடிந்தது.

    Previous Next

    نموذج الاتصال