No results found

    மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரத தாயை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்- ராகுல் காந்தி கடும் தாக்கு


    மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது, மணிப்பூர் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்தார்.

    இந்நிலையில், மணிப்பூர் சம்பவம் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

    ஆளுங்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் ராகுல் காந்தி மேலும் பேசியதாவது:-

    மணிப்பூர் மாநில மக்களின் குரசை நசுக்கிவிட்டீர்கள்.

    மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரத தாயை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்.

    நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. தேச துரோகிகள்.

    இந்திய ராணுவத்தால் மணிப்பூர் கலவரத்தை ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் அதை செய்யவில்லை.

    நாட்டு மக்களின் குரலை கேட்காமல் யாரின் குரலை பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார் ?

    ராவணவன் மேகலா, கும்பகர்ணன் ஆகிய இரண்டு பேரின் பேச்சை மட்டுமே கேட்டார். ராவணனை போல் பிரதமர் மோடியும் அமித்ஷா, அதானி ஆகிய இரண்டு பேரின் பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இலங்கையை எரித்தது அனுமான் இல்லை. ராவணனின் ஆணவம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال