No results found

    தெரு நாய்களை பிடிக்க எதிர்ப்பு;போலீசாருடன் மோதல்


    புதுவையில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாய்கள் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் அச்சமடையும் பொதுமக்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என நகராட்சியிடமும், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம் புகார் அளித்திருந்தனர்.

    தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில் உழவர்கரை நகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி நகராட்சி ஊழியர்கள் நேற்று முதல் வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து சென்று வருகின்றனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நகராட்சி ஊழியர்கள் தங்களது வாகனங்களில் புதுவை கடற்கரைசாலையில் சுற்றி திரிந்த நாய்களை பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் நாய்களை பிடிக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் நாய்பிடிக்கும் வாகனத்தின் சாவியை அவர்கள் வாகனத்தில் இருந்து எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் உடனே பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியக்கடை போலீசார் விலங்குகள் நல ஆர்வலர்களை அழைத்து பேசினர். அப்போது போலீசாரிடமும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பணி செய்வதை தடுக்க கூடாது என்றும், வாகனத்தின் சாவியை எடுப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று கூறி விலங்குகள் நல ஆர்வலர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    Previous Next

    نموذج الاتصال