No results found

    ரூ. 1 கோடி-ப்பு.. இந்தியாவில் மைக்ரோ எல்இடி டிவி அறிமுகம் செய்த சாம்சங்..!


    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மைக்ரோ எல்இடி டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தொலைகாட்சி சந்தையில் முன்னணி நிறுவனமாக சாம்சங் விளங்கி வருகிறது. பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புதிய மைக்ரோ எல்இடி டிவி முற்றிலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.

    மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் சாம்சங் மைக்ரோ எல்இடி டிவி பயனர்களுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. வழக்கமான ஒஎல்டி பிக்சல்களை விட பத்தில் ஒருமடங்கு வரை அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் அளவு 24.8 மில்லியன் மைக்ரோமீட்டர் ஆகும். இதில் உள்ள மைக்ரோ எல்இடி-க்கள் சஃபயர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சாம்சங் டிவியில் மைக்ரோ எல்இடி, மைக்ரோ கான்டிராஸ்ட், மைக்ரோ கலர், மைக்ரோ HDR மற்றும் மைக்ரோ AI பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை சிறப்பான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் அரினா சவுன்ட் அம்சம் டிவியில் 3D சவுன்ட் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் OTS ப்ரோ, டால்பி அட்மோஸ் மற்றும் Q சிம்பனி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் உள்ள மல்டி-வியூ அம்சம் அதிகபட்சம் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்க வழி செய்கிறது. மைக்ரோ எல்இடி டிவியுடன் சோலார் செல் ரிமோட் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ரிமோட்-இல் பேட்டரி போட வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் சாம்சங் மைக்ரோ எல்இடி டிவியின் விலை ரூ. 1 கோடியே 14 லட்சத்து 99 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال