No results found

    இனி வீடியோ காலில் இருந்து கொண்டே.. வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புது அம்சம்..!


    வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் பேசும் போது, உங்களது சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

    அதன்படி பயனர்கள் வீடியோ கால் பேசும் போது ஷேர் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம். ஷேர் செய்ய துவங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும். இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன்களில் சிறப்பான வியூவிங் மற்றும் ஷேரிங் அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ கால் பேசும் போது மொபைலை லேன்ட்-ஸ்கேப் மோடில் வைத்துக் கொள்வது நல்லது. 2016-ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் செய்வதற்கான வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக மே மாத வாக்கில் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்திற்கான டெஸ்டிங் செய்ய துவங்கியது. வின்டோஸ் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான டெஸ்டிங் ஜூன் மாத வாக்கில் துவங்கியது. தற்போது வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    Previous Next

    نموذج الاتصال