No results found

    எக்ஸ் தளத்தில் குறைந்த விலை சந்தா முறை.. குட் நியூஸ் சொன்ன எலான் மஸ்க்


    எக்ஸ் வலைதளத்தில் இரண்டு புதிய சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வரவிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வந்துவிடும் என்று அவர் தெரிவித்து இருக்கும் நிலையில், இவை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    இரண்டு புதிய சந்தா முறைகளில் ஒன்று குறைந்த விலையிலும், மற்றொன்று அதிக விலையிலும் கிடைக்கும் என்று தெரிகிறது. இவற்றின் குறைந்த விலை திட்டத்தில் விளம்பரங்கள் எதுவும் குறைக்கப்படாது என்றும், விலை உயர்ந்த சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி, எக்ஸ் தளத்தில் சந்தா முறைகளை பேசிக், ஸ்டாண்டர்டு மற்றும் பிளஸ் என மூன்று நிலைகளில் பிரிப்பது பற்றி எக்ஸ் தலைமை செயல் அதிகாரி லிண்டா ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அதன்படி தற்போது எலான் மஸ்க் தெரிவித்து இருக்கும் இரண்டு சந்தா முறைகள் பேசிக் மற்றும் பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    தற்போது பயன்பாட்டில் இருக்கும் சந்தா முறை ஸ்டாண்டர்டு பெயரில் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய சந்தா முறைகளின் படி பிளஸ் சந்தாவில் மட்டும் விளம்பரங்கள் இன்றி எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال