No results found

    தீபாவளியை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படும்: புதுச்சேரி அரசு அறிவிப்பு


    நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    புதுச்சேரியில் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து அம்மாநில முதல் மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    சுமார் 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க 16.53 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال