No results found

    ராஷ்மிகாவை தொடர்ந்து ஏஐ அச்சுறுத்தும் அடுத்த நடிகை


    முன்னணி நடிகையான நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போது கத்ரீனா கைப்பின் டீப் ஃபேக் (deep fake) புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், கத்ரீனா கைப் 'டைகர் 3' படத்திற்காக ஒரு துண்டு அணிந்து ஒரு அதிரடி காட்சியை செய்கிறார். ஆனால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தில் நடிகை கத்ரீனா கைப் அதே போஸில் ஆனால் மாற்றப்பட்ட ஆடையுடன் காட்டப்படுகிறார். இந்த புகைப்படம் சில மணி நேரங்களில் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இருந்தும் இந்த புகைப்படத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

    Previous Next

    نموذج الاتصال