No results found

    ஐதராபாத்தின் லாக் வளையல்களுக்கு புவிசார் குறியீடு- மத்திய அரசு அறிவிப்பு


    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் லாட் பஜாரில் விற்பனை செய்யப்படும் லாக் (Lac) வகை வளையல்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

    அதன்படி, தெலுங்கானாவில் புவிசார் குறியீடு பெறும் 17வது பொருள் இதுவாகும்.

    Previous Next

    نموذج الاتصال