No results found

    மேற்குவங்கம்: மது போதையில், பெண் காவலரை 'டார்லிங்' எனக் கூப்பிட்ட நபருக்கு 1 மாதம் சிறை


    மதுபோதையில், பெண் காவலரிடம் 'எனக்கு அபராதம் விதிக்கப் போறீங்களா டார்லிங்' எனக்கேட்ட நபருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் 1 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.

    துர்கா பூஜையை ஒட்டி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, லால் டிக்ரே பகுதிக்கு காவலர்கள் சென்று கொண்டிருந்தனர். வேபி ஜங்ஷன் வழியாக வந்த காவல்துறையினருக்கு, அப்பகுதியில் ஒருவர் பிரச்சனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றனர். அந்த இடத்தில பிரச்சினை செய்த ஜனக் ராம் என்ற நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    அந்த நேரத்தில் ஜனக் ராம், ஒரு பெண் காவலரிடம் 'ஹாய், அன்பே, அபராதம் விதிக்க வந்தீர்களா?' என கேட்டுள்ளார். இது தொடர்பாக மாயாபந்தர் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

    கடந்த வருடம், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஜனக் ராமிற்கு 3 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஜனக் ராம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், "முன்பின் தெரியாத பெண்ணை 'டார்லிங்' எனக் கூறுவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும். குறிப்பாக , குடித்திருக்கும் ஒரு ஆண், முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது இன்னமும் தீவிரமான குற்றம் என கருத்து தெரிவித்தது.

    பின்னர், குற்றவாளியின் 3 மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال