No results found

    அஞ்சுவை மணக்கும் எண்ணம் இல்லை: பாகிஸ்தான் முகநூல் நண்பர்


    'பப்ஜி' காதலனை தேடி சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், 'இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு (வயது 34) என்ற பெண், திருமணமாகி ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசிக்கிறார். இவரும், பாகிஸ்தான் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள அப்பர் திர் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற வாலிபரும் முகநூல் மூலம் நண்பர்களாகினர். இந்த நிலையில் நஸ்ருல்லாவை காண, குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அந்த நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அஞ்சுவும், அவரை விசாரித்த பாகிஸ்தான் போலீஸ் அதிகாரியும், அவர் நஸ்ருல்லாவை காதலிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அஞ்சுவை மணக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அவரின் ஒரு மாத கால விசா முடிந்தபின் ஆகஸ்டு 20-ந்தேதி இந்தியா திரும்பிவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறியுள்ளார். அஞ்சுவை எதிர்பார்த்து ராஜஸ்தானில் அவரது கணவர் அரவிந்த்குமாரும் தங்கள் 15 வயது மகள், 6 வயது மகனுடன் காத்திருக்கிறார்.

    Previous Next

    نموذج الاتصال