இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவை நேரில் காண ரசிகர்களுக்கு படக்குழு வாய்ப்பளித்துள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழாவை காண 1000 இலவச பாஸ்களை ரசிகர்களுக்கு வழங்குகிறது. மேலும் இதற்கான பதிவு நாளை 1 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 FREE PASSES ready-ah irukku! Neengalum ready-ah irunga! Nalaiku 1 PM santhipom😎 #JailerAudioLaunch💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi #Jailer pic.twitter.com/h9cVfAZj6j
— Sun Pictures (@sunpictures) July 23, 2023