No results found

    வங்காளதேச கேப்டன் அவமரியாதை செய்தார்- இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் குற்றச்சாட்டு


    இந்தியா-வங்காளதேசம் மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. பரபரப்பான இந்த ஆட்டம் வெற்றி, தோல்வியன்றி 'டை'யில் முடிவடைந் தது. முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 49.3 ஓவரில் 225 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இந்தப் போட்டி'டை'யில் முடிந்ததில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனது. இதனால் இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன. முதல் ஆட்டத்தில் வங்காள தேசமும் (40 ரன்), 2-வது போட்டியில் இந்தியாவும் (108 ரன்) வெற்றி பெற்று இருந்தன.

    3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் நடுவர்களின் முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளித்ததாக இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் குற்றம் சாட்டியுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:- இரு அணிகளுமே மிகச் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர். வங்காள அணியினர் நன்றாக பேட்டிங் செய்தனர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆடினார்கள். இடையில் நாங்கள் கொஞ்சம் ரன்களை கொடுத்து விட்டோம். நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பரிசளிப்பு விழாவின்போது வங்காளதேச கேப்டனும், வீராங்கனைகளும் அவமரியாதை செய்தனர். இவ்வாறு ஹர்மன் பிரீத் கவூர் கூறியுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال