No results found

    இனி 15 பேருடன் பேசுங்க.. வாட்ஸ்அப்-இல் வெளியான வேற லெவல் அப்டேட்!


    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால்களில் அதிகபட்சம் 32 பேருடன் பேச முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பயனர்களால் அதிகபட்சம் 7 பேருடன் மட்டுமே க்ரூப் வீடியோ கால் பேச முடிந்தது. தற்போது 32 பேருடன் வீடியோ காலில் பேசுவதற்கு, வீடியோகால் ஏற்கனவே துவங்கி இருப்பது அவசியம் ஆகும்.

    தற்போது வாட்ஸ்அப்-இல் வெளியாகி இருக்கும் அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் வீடியோ கால்-ஐ மேற்கொள்ளும் போதே அதிகபட்சம் 15 பேருடன் உரையாட முடியும். இதற்கான அப்டேட் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.15.14, 2.23.15.10, 2.23.15.11 மற்றும் 2.23.15.13 வெர்ஷன்களில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்த துவங்கலாம். பீட்டா வெர்ஷனில் இருப்பதால், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும். வாட்ஸ்அப்-இல் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்வதற்கான வழிமுறை மிகவும் எளிமையானது தான். வாட்ஸ்அப் செயலியில் கால்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்து, க்ரியேட் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி க்ரூப் வீடியோ கால் ஆப்ஷனில் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும் தற்போது உங்களால் அதிகபட்சம் ஏழு பேரை, கால் துவங்கும் முன் சேர்க்க முடியும். கால் துவங்கியதும், அதிகபட்சம் 32 பேரை இணைத்துக் கொள்ள முடியும். புதிய அப்டேட் மூலம் இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    Previous Next

    نموذج الاتصال