No results found

    புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்


    முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வார்டு நிர்வாகிகள் ஆலோ சனைக்கூட்டம் தொகுதி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

    அ.தி.மு.கவின் துணையோடு ஆட்சி பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தடையின்றி நிறைவேற்ற வேண்டும்.

    தடையின்றி வழங்கும் கூட்டணி அரசு மத்தியில் இருக்கும்போது மாநில அந்தஸ்து பெற முயற்சிப்பதே சரியான தீர்வாக இருக்கும். தேர்தல் நேரத்தில் மட்டும் மாநில அந்தஸ்து பற்றி முதல்- அமைச்சர் பேசாமல், அதை பெறுவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில அ.தி.மு.க. இணை செயலாளர் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், மூத்த நிர்வாகி வில்லியனூர் மணி, கஜேந்திரன், உழவர்கரை நகர செயலாளர் பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال