No results found

    கைது செய்யப்பட்டால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்துவார்: ஆம் ஆத்மி


    டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி சம்மன் அனுப்பி கெஜ்ரிவால் விசாரணைக்காக ஆஜரானால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    இதற்கிடையே நேற்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி எல்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒருவேளை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டால், நீங்கள் ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்த வேண்டும். நீங்கள் தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டும் என கெஜ்ரிவாலிடம் வேண்டுகோள் வைத்தனர்.

    மேலும், கைது செய்யப்பட்டால் ஜெயிலில் இருந்து முதல்வருக்கான வேலையை தொடர, உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்க இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    "நாங்கள் மக்கள் மத்தியில் செல்கிறோம். ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அட்டூழியங்கள் நடப்பதாக மக்கள் கூறுகின்றனர். அதனால்தான் சிறைக்கு சென்றாலும் முதல்வராக இருக்க வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் இன்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

    டெல்லி மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர், அவர் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று, ஜெயலில் கேபினட் கூட்டத்தை நடத்த அனுமதி கேட்போம்" என்று டெல்லி மந்திரி ஆதிஷி தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال